1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (10:11 IST)

இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் மணிக்கு வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஏற்கனவே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது தெரிந்ததே.