தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக வலுவான கூட்டணி அமைத்திருக்கிறது. ஒருபக்கம் பாஜக உள்ளிட்ட சில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுகவை ஒப்பிடும்போது திமுக வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது. திமுக ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டது.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக,அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, ஐஜேகே, புரட்சி பாரதம், தாமாக உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன.. ஆனால் இதுவரை தொகுதி பங்கீட்டுக்காண பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை. மதுரையில் நேற்று அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.. ஆனால் அதில் முடிவு எட்டப்படவில்லை.. இந்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.. அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவுக்கு எவ்வளவு தொகுதி என்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனத்தெரிகிறது..
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 20 தொகுதிகளில் பேட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாக தெரிகிறது.. ஆனால் அதை கொடுக்க முடியாத நிலையில் அதிமுக இருப்பதாக தெரிகிறது.. இந்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..