வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

rahul stalin
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கைக்கு ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
நாங்கள் ஒரு தேசியக் கட்சி, வெறும் 25 இடங்களுக்கு சம்மதிக்க முடியாது" என்ற பிடிவாதத்தில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' காங்கிரஸிற்கு ஒரு மாற்று வாசலாக தெரிகிறது. திமுக உரிய இடங்களை ஒதுக்காவிட்டால், விஜய்யுடன் கைகோர்க்க ராகுல் காந்தி அதிரடி முடிவெடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 
 
நாங்கள் தொண்டு நிறுவனம் அல்ல, அரசியல் கட்சி" என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏற்கனவே எச்சரித்துள்ளார். விஜய்-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் ஆதரவுடன் இந்த தொகுதி பங்கீடு விவகாரம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva