1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (17:03 IST)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் ஆரம்பமாக உள்ள நிலையில் மார்ச் 2ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் மார்ச் 2-ஆம் தேதி நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 2-ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது