1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (22:39 IST)

டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 130 வருட வானிலை வரலாற்றின் அடிப்படையில், வ மார்ச் மாதத்தில் தமிழ் நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இதுதான் எனவும் .கடந்த 1938            -ல்  இலங்கையையும், 1994 ஆம் அஅன்டு அந்தமானையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நெருங்கின எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,   தமிழ் நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புதுச்செரி,   ,  எண்ணூர் கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.