வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மார்ச் 2026 (09:57 IST)

பயப்படமா எழுதுங்க!.. 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து....

vijay
தமிழ்நாட்டில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்தி 27 ஆயிரம்  மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.. தமிழக முழுவதும் 3412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2ம் தேதியான இன்று துவங்கும் பனிரெண்டாம் பொதுத் தேர்வு மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. இந்த தேர்வில் மொத்தம் 8 லட்சத்தி 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகிறார்கள்..

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள 12ம் வகுப்பு பொது தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.. எனவே அவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுரைகளையும், வாழ்த்துகளையும் சொல்லி வருகிறார்கள்..

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்கவுள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.