1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. why tvk leader vijay keeps quit in trisha issue

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

vijay trisha
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய போது விஜயை நடிகை திரிஷாவோடு இணைத்து கருத்து சொல்லியிருந்தார்.. ‘விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வரட்டும்.. அப்புறம் அரசியல் செய்யலாம்’ என்கிற ரீதியில் அவர் பேச அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்..

விஜயை அரசியல்ரீதியாக விமர்சிக்கும் திமுகவை சேர்ந்த சிலரும் அதன் கூட்டணி கட்சியான கட்சிகளான விடுதலை சிறுத்தை திருமாவளவன், டிடிவி தினகரன் போன்றவர்களும் கூட நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ‘ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தி பேசிய நயினார் நகேந்திரன் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அருவருப்பானது.. இதை பலரும் கண்டித்தாலும் சம்பந்தப்பட்ட விஜய் இப்போது வரை இதை கண்டிக்கவில்லை..

வீரமங்கை வேலுநாச்சியார் படத்தை போட்டு அரசியல் செய்யும் விஜய் ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் போது கள்ள மௌனம் காப்பது ஏன்?.. பாஜகவை கண்டிக்க அவ்வளவு பயமா?.. தன்னை ஆளாக்கிய சினிமாவுக்கும், தன்னுடன் நடித்த நடிகைக்குமே குரல் கொடுக்காத விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கா நல்லது செய்யப் போகிறார்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...