இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...
கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் கடந்த மார்ச் மாசம் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இஸ்ரலை சேர்ந்த 27 வயது சுற்றுலாப் பயணி அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர் என மூன்று ஆண்டுகளுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் இரவு 10.30 மணியளவில் ஹம்பி அருகே உள்ள சனாபூரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மூன்று பேர் அந்த பெண்ணுடன் இருந்த ஆண்களை தாக்கி கீழே கால்வாயில் தள்ளிவிட்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்ணை தனியாக இழுத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மல்லேஸ், சாய் சரபா உள்ளிட்ட மூன்று பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது..