வெள்ளி, 17 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : திங்கள், 16 பிப்ரவரி 2026 (13:38 IST)

அவமரியாதை எப்போதும் ஏற்கமுடியாது... நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா...

nainar
நடிகை திரிஷா நடிகர் விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதோடு விஜய்க்கு  நெருக்கமான தோழியாகவும் இருக்கிறார். இந்நிலையில்தான், 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளரிடம் விஜயை பற்றி பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முதலில் அவர் திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். குடும்பஸ்தனாக இருந்து அரசியல் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்..

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவை சேர்ந்த சிலரும், டிடிவி தினகரன், திருமாவளவன், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசக்கூடாது எனவும் கூறினார்கள். பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனும் நயினார் நாகேந்திரன் பேசியது தவறு என கூறினார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் தன்னை பற்றி பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது வழக்கறிஞர் மூலமாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் அதில் கூறப்பட்டிருப்பதாவது.
nainar

மாநிலத்தில் ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசியதை எதிர்பார்க்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் விமர்சிப்பது சரியல்ல. நான் எப்போதும் நடுநிலையாக இருக்க விரும்புகிறேன்.. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமும் அவருக்கு இல்லை.. திரைக்கலைஞர் என்கிற அடையாளத்தில் மட்டுமே நான் இருக்க விரும்புகிறேன். 

எனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப்பொருளாக மாற்ற வேண்டாம். எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. அரசியலில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவமாரியாதையை எப்போதும் ஏற்க முடியாது’ என அதில் கூறியிருக்கிறார்.