1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. why permission not given to tvk vijay

விஜய்க்கு அனுமதி மறுப்பு ஏன்?.. ஃபர்மிஷன் வாங்க தெரியலயா?. தவெகவில் நடப்பது என்ன?...

vijay
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் தொடர்பான பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தவெக சொல்கிறது. விஜயின் பொதுக்கூட்டங்களில் இந்த புகாரை சொல்கிறார். குறிப்பாக திமுக சதி செய்கிறதே என்பதே அவரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்தது.

இன்று பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அது மிகவும் குறுகலான பகுதி என்பதல் அந்த இடத்தில் நிறைய பேர் கூடிவிட்டால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவில்லை. அதேநேரம் அதே பெரம்பூரில் வேறு இடத்தில் விஜய் அனுமதி வாங்கியிருக்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு விஜயை திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்வதாக வருவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

வேண்டுமென்றே எனக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. திமுகவுக்கு வேண்டிய சில தேர்தல் அதிகாரிகளின் வேலை இது என்பது போல ஒரு புகார் மனுவை விஜய் இன்று மதியம் தலைமை தேர்தல் அதிகாரியை தலைமை செயலகத்தில் சந்தித்து கொடுத்தார். அதாவது இப்படி புகார் அளிப்பதன் மூலம் தனக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவது போல தோற்றத்தை உருவாக்க விஜய் முயற்சி செய்கிறார்..

48 மணி நேரத்திற்கு முன் சரியான ஆவணுங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தால் உடனே அனுமதி கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. மற்ற கட்சிகள் சுலபமாக அனுமதி வாங்கும் போது தவெகவுக்கு மட்டும் ஏன் இந்த சிக்கல் வருகிறது?.. அதிலிருக்கும் மர்மம் என்ன?.. மற்ற எல்லோருக்கும் அனுமதி கிடைக்கிறது சரியான முறையில் அனுமதி வரை தவெகவினருக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்தே தவறு நடக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தனக்கு மட்டும் பாதிப்பு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களை நம்ப வைத்து பிரச்சாரம் செய்யாமல் தவிர்க்க நினைக்கிறார் விஜய்.. மேலும், தேர்தலில் வெற்றி பெறவில்லையென்றால் இதுதான் காரணம் என கைகாட்டி தப்பித்து விடலாம் எனவும் நினைக்கிறார் என்கிறார்கள் சிலர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் பிரச்சாரத்திற்கு செல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது வந்து எனக்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற விஜய் மக்களை ஏமாற்றுவது கீழ்த்தரமான அரசியல் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
திமுகவில் கலைஞரின் சாதனையை தொட்ட துரைமுருகன்!.. சூப்பர் அப்டேட்..