1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk given seats to varisu candidates

புதிய வாரிசுகளுக்கு திமுகவில் வாய்ப்பு!.. யார் யாருன்னு பாப்போம் வாங்க!..

stalin
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறது. இந்நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களின் தொகுதி பற்றிய விபரங்களை வெளியிட்டார். திமுகவை பொறுத்தவரை 163 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. ஏனெனில் வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை திமுக அதிக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

ஏற்கனவே திமுகவில் அமைச்சர்களாக இருந்த 6 பேருக்கு அதே தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதியும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியும், துறைமுகம் தொகுதி சேகர் பாபுவுக்கும், மயிலாப்பூர் தொகுதி ஏ.வ.வேலுவுக்கும், சைதாப்பேட்டை தொகுதி மா.சுப்பிரமணியனுக்கும், ஆயிரம் விளக்கு தொகுதி எழிலன் நாகநாதனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ கயல்விழி செல்வராஜ், பத்மநாதபுரம் தொகு எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆர்.காந்தி ஆகிய மூன்று அமைச்சர்களுக்கும் இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருபக்கம், இந்த முறை புதிய வாரிசுகளுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் காந்திக்கு பதில் அவரின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டைஇய்ல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனுக்கு பதில் அவரின் மகன் கார்த்திக்கு வில்லிவாக்கத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகரிலும்,  பொன்முடிக்கு பதில் அவரின் மகன் கௌதமசிகாமணிக்கு திருக்கோவிலூரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.,
அடுத்த கட்டுரையில்
6 அமைச்சர்களுக்கு அதே தொகுதி!.. 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை!.. திமுக வேட்பாளர் பட்டியல் விபரம்!...