விஜய் சார் வந்தபின் மாசம் ரூ.30 ஆயிரம் மிச்சம்!.. ரவி மரியா சொன்ன தகவல்..
தமிழகத்தில் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. சினிமா துறையில் 30 வருடங்களுக்கும் மேல் பயணித்துவிட்டு அரசியலுக்கு வந்து இரண்டு வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு தமிழக மக்களின் ஆதரவை பெற்று ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
இது திரைத்துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜய் முதலமைச்சராக வந்திருக்கும் நிலையில் திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஆகியவை நேரில் சென்று முதல்வர் விஜயிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக செய்து கொடுக்கிறேன் முதல்வர் விஜயிடம் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறார்.
இந்நிலையில்தான் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரவி மரியா என் வீட்டின் அருகே சாலையோரம் கடை வைத்திருக்கும் நபர் என்னிடம் ஒன்று சொன்னார். தினமும் போலீசுக்கு 500, கவுன்சிலருக்கு 500 என போன ஆட்சியில் மாசா மாசம் 30 ஆயிரம் கப்பம் கட்டி வந்தேன்.. ஆனால் விஜய் சார் ஆட்சிக்கு வந்த பிறகு எனக்கு மாசம் 30 ஆயிரம் மிச்சம் ஆகுது என்று சொன்னார்.. கண்டிப்பாக திரையுலகை சேர்ந்த அனைத்து பிரச்சனைகளையும் விஜய் சார் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன் என்று பேசினார்.
இயக்குனர் ரவிமரியா சமீபத்தில் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.