ஈரான் ராணுவத்தை அழித்துவிட்டோம்!.. அதான் பயந்துட்டாங்க - டொனால்ட் டிரம்ப்
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களை ஈரான் தாக்கியதால் கோபமடைந்த அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அதோடு, ஈரானில் பல இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. எனவே ஈரான் அமெரிக்கா போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு உலக மக்களிடம் எழுந்தது. அதேநேரம், கடந்த 2 வாரங்களாக ஈரான் நாட்டை அமெரிக்கா தாக்கவில்லை. இதையடுத்து எடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் கடுமையான தாக்குதலால் ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கிறது.. ஈரானின் ராணுவத்தை பெருமளவில் நாங்கள் அழித்து விட்டோம். எனவே இரு நாடுகளுக்கும் இடையே நல்ல முடிவும் ஒப்பந்தமும் எட்ட வாய்ப்பிருக்கிறது என நான் நம்புகிறேன் என அவர் கூறியிருக்கிறார்.