தொடர்புடைய செய்திகள்
- பதிவான வாக்குகள் 853, மெஷினில் காட்டுவதோ 903: தேர்தல் அதிகாரிகள் குழப்பம்
- பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: நீடிக்கும் குழப்பம்; மக்கள் கடும் அவதி!!!
- விபச்சாரம் செய்வதைவிட இது கேவலமானது! 50 யுடியூப் சேனலுக்கு சீல் வைத்த நெஞ்சிருக்கும் பட நடிகை!
- இரவு 8 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடி: பரபரப்பு தகவல்
- விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலி: காஞ்சிபுரத்தில் சோகம்!!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் அகற்றம் ஏன்? ஆட்சியர் விளக்கம்
நேற்று தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் பதிவான வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவந்தண்டலம் மற்றும் வாயலூர் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை எடுக்காமல் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த பேட்டரியை எடுப்பதற்காகவே சீல் அகற்றப்பட்டதாகவும், பேட்டரியை எடுத்த பின்னர் மீண்டும் சீல் வைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்தே இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது
அடுத்த கட்டுரையில்
