விபச்சாரம் செய்வதைவிட இது கேவலமானது! 50 யுடியூப் சேனலுக்கு சீல் வைத்த நெஞ்சிருக்கும் பட நடிகை!

Last Updated: புதன், 17 ஏப்ரல் 2019 (12:00 IST)
தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை பூனம் கவூரை பார்த்தவுடன் அடையாளம் காணமுடிவது நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான்,  அந்த அளவிற்கு அப்படத்தில் உண்மையான காதலியாக தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார்.


 
தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால்  தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 
 
கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு  கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ் படங்களில் நடித்தார். அழகு புதுமையான முகபாவனை கொண்டிருந்தாலும் தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 


 
பூனம் கவுர் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை. அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவாராம். அப்படித்தான் அண்மையில் அரசியலில் குதிக்கப்போகும் பவன் கல்யாணை மகேஷ் கத்தி என்னும் விமர்சகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் செம்ம கடுப்பான பூனம், விபச்சாரம் செய்து சம்பாதிப்பதை விட, இப்படி மற்றவரை விமர்சனம் செய்து சம்பாதிப்பது மிகவும் கேவலமானது எனக் கூறினார். 


 
தற்போது அது  குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை  பூனம் கவுர், இந்த விவகாரம் மட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே என்னைப் பற்றி தவறான செய்திகளை பல இணையதள  ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகின்றது. அதெல்லாம் கேட்டு நான் மிகவும் மனம் நொந்துபோய் உள்ளேன். எனவே, என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி வரும் 50க்கும் மேற்பட்ட யுடியூப் சேனல்கள் மீது நான் புகார் அளித்துள்ளேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் பூனம் கவுர். 


இதில் மேலும் படிக்கவும் :