திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (13:36 IST)

விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலி: காஞ்சிபுரத்தில் சோகம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிர் அடுத்த நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை இன்று தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதமாக விஷவாயு தாக்கி கண்ணன், கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதாபாய் ஆகிய 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலேயே இந்த விபத்து நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.