வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (08:55 IST)

பாஜகவுக்கு ஓட்டு – தன் விரலைத் தானே வெட்டிக்கொண்ட வாலிபர் !

தவறுதலாக பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதால் தன் விரலைத் தானே வெட்டிக்கொண்டுள்ளார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில்  தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.  அதேப் போல உத்தரபிரதேசத்தில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் இதில் நடைபெற்றது.

அங்கேயுள்ள புலான்த்ஷர் எனும் தொகுதியில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. அத்தொகுதிக்குட்பட்ட ஷிகார்புர் பகுதியில் பவன் குமார் என்னும் இளைஞர் பகுஜன் சமாஜ் கட்சியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டுள்ளார். ஆனால் நேற்று வாக்குப்பதிவின் போது தவறுதலாக பாஜக வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

இதனால் மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளான பவன் வீட்டுக்கு சென்றதும் தனது ஆட்காட்டி விரலைக் கத்தியால் வெட்டியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது உறவினர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி டிவிட்டரில் பேசியுள்ள அவர் ‘ தான் செய்த தவறுக்கு இது தண்டனை எனக் கூறியுள்ளார்’ . இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது.