1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:14 IST)

ரஜினி அரசியல் எண்ட்ரி எப்படி இருக்கும்?

நவம்பரியில் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்றும் அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. 
 
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து பிரமுகர்களை இணைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜகவும் தனித்து போட்டியிட உள்ள நாம் தமிழரும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். 
 
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா? அப்படியே ஆரம்பித்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? என பல கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
நவம்பரியில் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்றும் அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் அதிகமாக கூட்டம் சேர்த்து மாநாடோ, பொதுக்கூட்டமோ நடத்த முடியாது என்பதால் கட்சி பெயரை சிம்பிளாக அறிவிக்க  ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.