வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (09:38 IST)

ரஜினி செய்ததை சூர்யாவும் செய்துவிடுவாரோ? விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கம்!

சூரரைப் போற்று திரைப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்து விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார். 

மேலும், சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது ரூ.5 கோடியை வழங்கியுள்ளார். 

ஆனால் சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இனிமேல் சூர்யாவின் எந்த படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்கக்கூடாது என சொல் அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரை அப்படி புறக்கணிக்க முடியாது எனவும் சொல்லப்படுகிறது.

இதேபோன்ற ஒரு சூழ்நிலை ரஜினிக்கு உழைப்பாளி படத்தின் போது உருவானபோது விநியோகஸ்தர்கள் இல்லமல் நேரடியாக தியேட்டரிலேயே படத்தை ரிலீஸ் செய்வேன் என சொன்னது போல சூர்யாவும் இனிமேல் நேரடியாக தியேட்டர்களிலேயே தன் படத்தை ரிலீஸ் செய்துவிடுவாரோ என பேச்சு எழுந்துள்ளது.