1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:20 IST)

துரைமுருகன், டி.ஆர். பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

திமுக பொதுச் செயலாளர் மற்றும் திமுக பொருளாளர் பதவிகளுக்கு இன்று காலை முதல் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு மட்டுமே விண்ணப்பம் செய்திருந்தார். இதனையடுத்து இருவரும் ஏக மனதாக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக பொதுச்செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக க.அன்பழகன் இருந்த நிலையில் அவருடைய பதவிக்கு தற்போது துரைமுருகன் வந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிஆர் பாலு அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.