தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை.. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..!
- பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..! 6 மாணவர்கள் உயிரிழந்த துயரம்..!!
- இன்றுடன் முடிவடைந்தது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முடிவு எப்போது?
- அமெரிக்காவில் கேள்விக்குறியாகும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பு: மேலும் ஒரு மாணவர் மர்ம மரணம்..!
- அறிவியல் பாட தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம்.. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி..!
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?
சிபிஎஸ்சி தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தேர்தலால் தாமதம் ஆகுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் மொத்தம் 35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர்
வழக்கமாக சிபி சிபிஎஸ்சி தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் நிலையில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் தேர்வு தாள் திருத்துதல் உள்ளிட்ட பணி தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மாநில திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாவது வாரத்தில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்பது குறித்து அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை
கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் பணிகளால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
