1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:26 IST)

அமெரிக்காவில் கேள்விக்குறியாகும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பு: மேலும் ஒரு மாணவர் மர்ம மரணம்..!

அமெரிக்காவில் ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் 13 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய மாணவர்கள் பலியாகி வருவது இந்திய மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கொலை, விபத்து, மர்மமான முறையில் உயிரிழப்பு என ஏற்கனவே 13 இந்திய மாணவர்கள் 2024 ஆம் ஆண்டு மட்டும் உயிரிழந்த நிலையில் தற்போது பதினான்காவது மாணவனாக சாய் என்பவர் உயிரிழந்துள்ளார் 
 
ஓகியோ மாகாணத்தில் தெலுங்கு பேசும் மாணவரான இவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் இவரது மரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 14 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது 
 
அமெரிக்காவில் தொடர்ச்சியாக இந்திய மாணவர்களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Siva