1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:40 IST)

இன்றுடன் முடிவடைந்தது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முடிவு எப்போது?

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த தேர்வின் முடிவு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 
 கடந்த சில நாட்களுக்கு முன் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இன்றுடன் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடைவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12 முதல் தொடங்க இருப்பதாகவும் முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது 
 
மாணவர்களின் விடைத்தாள்கள் 118  மண்டல மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் ஏப்ரல் 12 முதல் 22 ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அதன் பிறகு  மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடிந்த பின்னர் ஏப்ரல் 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
 விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவு குறித்துள்ளது. 
 
Edited by Mahendran