விசில் புரட்சி வீணாப்போச்சே!.. காலையிலயே போய் ஓட்டு போடுங்க!.. விஜய் சொன்னது நடக்கலயே!..
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உடனேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என அதிரடியாக முழங்கினார். தொடர்ந்து திமுகவை மட்டுமே மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திமுக ஒரு தீயசக்தி என அடித்தொண்டையில் கத்தினார். அதேநேரம் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற தலைவர்கள் போல சுறுசுறுப்பாக பிரச்சாரத்திற்கு செல்லாமல் மிகவும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரமும், ரோட் ஷோவும் செய்தார் விஜய்.
ஒருபக்கம் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுகிறார். விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பாளர்கள் என விஜய் நம்புகிறார்.. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களில் பலரும் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
கடந்த சில நாட்களாகவே பிரச்சாரத்தில் பேசிய விஜய் ஏப்ரல் 23ம் தேதி காலையிலேயே சீக்கிரமே எழுந்து, உங்களுக்கு பிடித்த சாமியை கும்பிட்டு விட்டு காலை 9 மணிக்குள்ளயே போய் நம்ம விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டுவிடுங்கள் என தொடர்ந்து சொல்லி வந்தார். குறிப்பாக இது ஒரு விசில் புரட்சி தேர்தல் என்றும் கூறினார். ஆனால் இன்று காலை 11 மணி நேரப்படியே தமிழகத்தில் 36.57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. விஜய் சொன்னது நடந்திருந்தால் கண்டிப்பாக வாக்குப்பதிவு 45 சதவீதத்தை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை..
அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் நடந்த போது காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் இந்த முறை 10 சதவீதமாக அதிக வாக்குகள் பதிவாகியிருக்கிறது. ஆனால் விஜய் சொன்னது போல் விசில் புரட்சி ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம் இன்று மாலை 6 மணி வரை நேரம் இருப்பதால் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரிக்குமா என்பது மாலை தெரிந்துவிடும்.