திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (09:14 IST)

சென்னையில் விக்ரம் மகன் ஓட்டிய கார் விபத்து: குடிபோதையா?

பிரபல நடிகர் சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டிய கார் இன்று சென்னை தேனாம்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை சென்னை தேனாம்பேட்டையில் காரை ஓட்டி வந்தபோது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருசிலருக்கு பலத்த காயம் இல்லை ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த விபத்து காவல் ஆணையர் இல்லம் அருகே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். துருவ் குடிப்போதையில் கார் ஓட்டினாரா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.