1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about mk stalin

ஓகே.. தோல்வி அடைய வாழ்த்துக்கள்!.. திமுகவை நக்கலடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..

stalin
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மீதான விமர்சனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிகப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், அவரின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

என்னதான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.. திறந்ததெல்லாம் திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ.. அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் ஸ்டாலின்

7.5 சதவீத மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3 சதவீத விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்.. நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில் அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள்.. இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்?.. இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!

அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... ஓஹோ.. அப்படி எதுவுமே இல்லையோ!! சரி.. தோல்வி அடைய வாழ்த்துகள்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
கோபத்தில் திமுக!.. தவெக பக்கம் போகும் காங்கிரஸ்!... நடப்பது என்ன?..