திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:16 IST)

விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது - 2 பேர் பலி

இத்தாலியில் உள்ள விமான நிலையம் அருகே இரு டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தாலி நாட்டின் போலோக்னா விமான நிலையம் அருகே உள்ள பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்த படி சென்று கொண்டிருந்தன. அப்போது டேங்கர் லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த ரசாயனம் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
 
இதில் ரசாயனம் ஏற்றிசென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் லாரிகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.  50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பல்வேறு வாகனங்கள்  வெடித்து சிதறியுள்ளன.காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.