1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijayakanth talk against dmk video is viral

வெட்கக்கேடான திமுக ஆட்சி!.. விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்!...

vijayakanth
நடிகர் விஜயகாந்த் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக இருந்தார். கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்தித்து பேசும் பழக்கம் விஜயகாந்துக்கு இருந்தது. ஆனால், அவர் அரசியலுக்கு வந்தபின் திமுகவின் எதிரியாக மாறினார். திமுகவையும், அதிமுகவையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

பாலம் வருவதாக சொல்லி கோயம்பேடு பகுதியில் இருந்த விஜயகாந்தின் திருமண மண்டபத்தை திமுக அரசு இடித்தது. இது விஜயகாந்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. 2016 தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் சூழ்நிலையும் வந்தது. பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி சொன்னார். ஆனால், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு செல்லவில்லை.

அதேநேரம், கலைஞர் கருணாநிதி இறந்தபோது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜயகாந்த் பேச முடியாமல் அழுத வீடியோ வெளியானது. மேலும் சென்னை வந்தவுடன் நடக்கமுடியாத நிலையிலும் கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது தேமுதிக.

இன்று காலை அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் எவ்வளவு தொகுதி பங்கீடு என்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார். அதோடு திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பத்தை ஏற்று திமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக பிரேமலதா கூறினார்..

இந்நிலையில்தான், பல வருடங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் ‘திமுக ஒரு கட்சியா?. வெட்கக்கேடான கட்சி.. கலைஞர் சொல்றது எல்லாம் பொய்.. அவருக்கு மரியாதை கொடுத்துதான் நான் கலைஞர் கலைஞர்னு சொல்லிட்டு இருக்கேன்.. இலங்கையில் இன அழிப்பு நடந்த போது அதை வேடிக்கை பார்த்தவர்தான் கலைஞர். இந்த மக்கள் திமுகவுக்கும், காங்கிரஸ்க்கும் சரியான பாடப் புகட்டணும்’ என்று என விஜயகாந்த் மிகவும் கோபமாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இது சந்தர்ப்பவாத கூட்டணி.. விஜயகாந்த் இதை செய்யவே மாட்டார்!... தவெக கருத்து!...