திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:27 IST)

தாறுமாறாக ஓடிய கார் ; 2 பேர் பலி : சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
சென்னை எம்.ஆர்.சி.நகர் பேருந்து நிலையம் அருகே சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்று ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த இந்த விபத்தால் 6 பேர் படுகாயமடைந்தனர். 
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் ரீகன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.