வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (18:19 IST)

மோதிக்கொண்ட ரஷ்ய ஹெலிகாப்டர்கள்; 18 பேர் பலி

ரஷ்ய ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
ரஷ்யா வடமேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் 15 பயணிகள், 3 பணியாளர்கள் உள்பட 18 பேருடன் எம்ஐ-8 வகை ஹெலிகாப்டர் கிளம்பியது.
 
அப்போது மேலே பறந்துக் கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது. இந்த விபத்தில் எம்ஐ-8 ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி ரஷ்யா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலே பறந்துக் கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டது.