தீயசக்தி திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த்.. அவரின் ஆன்மா மன்னிக்காது!.. பாஜக விமர்சனம்..
நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்கிற கட்சியை 2005ம் வருடம் தொடங்கினார்.. 2006ல் தனித்துப் போட்டியிட்டார். 2011ம் வருடம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் வைகோ, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தார். ஆனால் அது மக்களிடம் வரவேற்பைபெறவில்லை. அதேநேரம் கடந்து 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..
அப்போது அந்த கூட்டணியில் பாஜகவும் இருந்தது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக அதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில்தான், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பிரேமலதா. இதைத்தொடர்ந்து, பிரேமலதாவின் இந்த முடிவை விஜயகாந்தின் ஆன்மா இதை மன்னிக்காத என பாஜக விமர்சனம் செய்திருக்கிறது..
தமிழக பாஜகவின் எக்ஸலத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டிருக்கிறது.