1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (12:36 IST)

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வர வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.  
வங்க தேசத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களும் மிக அதிகம்.
 
சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணம் விபத்தை ஏற்படுத்திய டிரைவரின் அலட்சியமே என தெரிய வந்தது.
 
எனவே விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்ய சாலை பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மாணவர்களின் போராட்டத்தால் வங்கதேசமே பரபரப்பானது. இந்த போராட்டத்தில் 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். இருந்தபோதிலும் மாணவர்களின் போராட்டம் குறையவில்லை.
இதனையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்கதேச அரசு, சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.