1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayabaskar says corona virus not affected TN

”கொரோனா தாக்குதல் இல்லை; தமிழர்கள் பயப்படவேண்டாம்..” விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, மக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜப்பான், தைவான், தென் கொரியா, அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, மக்கள் யாரும் அச்சப்படவேண்டாம்” என கூறியுள்ளார். மேலும் விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளிடம் பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
About Writer
Arun Prasath