செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (12:13 IST)

”இது பெரியார் பூமி, இங்கே காவி மலராது”.. கார்த்தி சிதம்பரம்

பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து பாஜக, தமிழகத்தில் அதிமுக வழியாக நுழையப்பாக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எதிர்கட்சிகளை போல் சில அமைப்புகளும் “இது பெரியார் மண், இங்கே தாமரை மலராது” எனவும் பாஜகவுக்கு சவால் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் “தமிழகத்தில் காவியை புகுத்துவதற்கு பாஜகவிற்கு அதிமுக உடந்தையாக இருக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், “பெரியார் பூமியில் நிச்சயமாக காவி மலராது” எனவும் கூறியுள்ளார்.