1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mk Stalin says controversial about ADMK

நல்லாட்சி விருது கொடுத்தவர்களை உதைக்கணும்! – ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Tamilnadu
தமிழகத்திற்கு சிறந்த நல்லாட்சி செய்யும் மாநிலம் என விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிம் செயல்பாடுகளை சுகாதாரம், பொருளாதாரம், மேலாண்மை என பல பிரிவுகளில் தர நிர்ணயப்படுத்திய பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு. அதில் மாநிலங்களில் சிறந்த நல்லாட்சி செய்யும் மாநிலமாக தமிழக அரசு முதல் இடம் பெற்றிருந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் மக்களாட்சி நடக்கவில்லை. தற்போதைய அதிமுக ஆட்சி கமிஷன் வாங்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுதான் நாட்டின் நல்லாட்சி என விருது கொடுத்திருக்கிறார்கள்,. விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய பரிசு! – திருப்பி அனுப்பிய பிரதமர் அலுவலகம்!