1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijaya prabakaran talk about how many seats

தேமுதிகவுக்கு எவ்வளவு சீட் வேணும்?!.. விஜய பிரபாகரன் லீக் பண்ணிட்டாரே!...

vijaya prabakaran
நடிகர் விஜயகாந்த்தால் துவக்கப்பட்ட தேமுதிக தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்தது. ஒருகட்டத்தில் 8 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததால் தேமுதிகவுக்கான வாக்கு வங்கிகள் சரியத் துவங்கியது.

தற்போது தேமுதிகவிற்கான வாக்கு இரண்டு சதவீதத்திற்கும் கீழே இருப்பதாக சொல்லப்படுகிறது..ஆனால் இது புரியாமல் பிரேமலதாவும், அவரின் மகன் விஜய பிரபாகரனும் தேமுதிக எந்த கட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் வெற்றிபெறும் என தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அதோடு தங்களை கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளிடம் அதிகப்படியான சீட் மற்ரும் ராஜ்யசபா தொகுதியும் கேட்கிறார்கள். இப்போது பிரேமலதா திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.. துவக்கத்தில் 30 தொகுதிகள் கேட்ட பிரேமலதா அதன்பின் இறங்கி வந்து 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என கேட்டு வருகிறார். இதை கொடுக்க திமுக, அதிமுக இரண்டுமே மறுக்கிறது. அதனால்தான் இன்னமும் கூட்டணி பேரம் இன்னமும் முடியவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு தேமுதிக நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகரன் ‘அதிமுகவும் திமுகவும் சம பலத்துடன் இருக்கின்றன.. எனவே தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிக்குதான் வெற்றி கிடைக்கும்.. அதிமுகவும் திமுகவும் 170 இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைக்கும் போது நாங்கள் 20 தொகுதிகளை வாங்கி  எங்கள் நிர்வாகிகளுக்கு கொடுப்பது எங்கள் கடமை’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
விஜய் மட்டுமல்ல.. நாங்களும் உச்சத்தில் இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளோம்.. தமிழிசை