கரூர் மட்டுமில்ல!.. அந்த விஷயத்தையும் நோண்டிய சிபிஐ!.. என்னமோ நடக்குது!..
தவெக தலைவர் விஜய் கடந்த சில நாட்களாகவே கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி அவர் டெல்லிக்கு சென்று சாரணையில் ஆஜரான நிலையில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று விசாரணையை சந்தித்தார்.
அப்போது விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர் பயணம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். குறிப்பாக ஏன் மிகவும் தாமதமாக கரூருக்கு போனீர்கள்?.. கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் மயக்கம் அடைந்த போது விபரீதத்தை நீங்கள் உணரவில்லையா?.. உணர்ந்தீர்கள் என்றால் எப்போது உணர்ந்தீர்கள்? அவர்களை பாதுகாக்க நீங்கள் என்ன முயற்சிகளை செய்தீர்கள்?.. என்பது உள்ளிட்டர் பல முக்கிய கேள்விகளி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு விஜயும் பதில் சொல்லியிருக்கிறார். குறிப்பாக நான் காவல்துறையை மட்டும் முழுதாக நம்பியிருந்தேன் என விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது.
கடந்த முறையை விட இந்த முறை விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய கேள்விகளை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. சிபிஐ விசாரணையில் விஜய் ஆஜரானபோது அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்கப்படவில்லை.. தமிழக வெற்றிக் கழகத்திற்கான நிதி எங்கிருந்து வருகிறது?.. யார் கொடுக்கிறார்கள்? அதற்கான கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறதா?.. இதுவரை பல மாநாடுகளை நடத்தியுள்ளீர்கள்? அதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது?.. போன்ற கேள்விகளையும் சிபிஐ அதிகாரிகள் நோண்டியதாக தகவல் கசிந்திருக்கிறது.
அரசியலுக்கு வந்துவிட்டால் இதையெல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும்.. வழக்கு விசாரணை என்று போய்விட்டாலே காவல்துறையாக இருந்தாலும் சரி.. சிபிஐயாக இருந்தாலும் சரி.. எல்லா விதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவார்கள்.. எல்லாவற்றிற்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதிலும் விஜய் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவையும் தொடர்ந்து விமர்சிக்கிறார். எனவே பல விதமான நெருக்கடிகள்8உம், அழுத்தங்களும் வரத்தான் செய்யும்.. அதையெல்லாம் விஜய் சமாளிக்கவேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஒருபக்கம் விஜயை பாஜக கூட்டணியில் இணைக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்.. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தணிக்கை துறை, சிபிஐ என எல்லாவற்றையும் பாஜக பயன்படுத்தி வருகிறது என்று விஜயின் ஆதரவாளர்களும், தமிழக வெற்றி கழகத்தினரும் குற்றம் சொல்லி வருகிறார்கள்.