விஜய்க்கு கொடுப்பாங்க!. எனக்கு கொடுக்க மாட்டாங்க!.. சீமான் ஃபீலிங்!..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கி அரசியல்வாதியாக மாறிய போது அவரை அரசியலுக்கு வரவேற்றார் சீமான். தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்.. அவருக்கென ஒரு கூட்டம் இருக்கிறது என்றார். அதோடு, அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார்.. அவரோடு சேர்ந்து பயணிக்கலாம் என சீமானும் திட்டமிட்டார்.
ஆனால் விஜயும் திராவிட கொள்கையை தூக்கிப் பிடித்ததால் சீமானுக்கு கோபம் ஏற்பட விஜயை மிகவும் கடுமையாக விமர்சிக்க துவங்கினார். விஜயின் ரசிகர்களை அணில் குஞ்சுகள் எனவும் தற்குறிகள எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார் சீமான்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜய்க்கு கேட்ட சின்னம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள்.. ஆனால் எனக்கு கொடுக்க மாட்டார்கள்.. அப்படியே நான் கேட்ட சின்னத்தை கொடுத்தாலும் மாற்றி விடுவார்கள்.. எந்த கட்சியும் எனக்கு போட்டி இல்லை.. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளிடையேதான் போட்டி.. நான் அந்த போட்டியில் இல்லை..
ஒருவர் இருமொழிக் கொள்கை என்கிறார். ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது.. எனக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் போதும்.. எனக்கு எதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்?.. ஒருவர் பெண்களுக்கு இலவச பாஸ் என்றார்.. இன்னொருவர் ஆண்களுக்கும் இலவச பாஸ் என்கிறார்.. நாடு எங்கு போய் முடியுமோ? என பேசியிருக்கிறார் சீமான்.