இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். தமிழகத்தில் முதல்முறையாக பல வருடங்களுக்குப் பின் கூட்டணி ஆட்சி மலர்ந்திருக்கிறது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் முதல்வர் விஜய் இன்று திருச்சி தொகுதியில் தனது வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார். அங்கே செயின்ட் ஜோசப் கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில், அங்கு உரையாற்றிய தல்வர் விஜய் முன்பு ரீலீஸ் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள். சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.. தற்குறி தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விக்குகுறியாக மாற்றியிருக்கிறார்கள். நீங்கள் மக்களை தப்பாக பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான்.. சும்மா இருக்க மாட்டான்.
எம்.ஜி.ஆரின் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்கு சதவீதம் வாங்கவில்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள். தவெகவுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். எம்.ஜி.ஆருடன் என்னை ஒப்பிட வேண்டாம். எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர்தான்.. பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் அன்பாக உழைக்க வந்த உங்க விஜய் அவ்வளவுதான் என அவர் பேசினார்..
