ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜனவரி 2026 (13:07 IST)

கூட்டணிக்கு வரும் டிடிவி தினகரன்!.. முக்கிய நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை!...

eps ttv
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, எத்தனை தொகுதிகள் என்கிற பேச்சுவார்த்தை நடத்துவது என அரசியல் கட்சிகள் வேகமாக செயல்பட தொடங்கியிருக்கின்றன.  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே இடம் பெற்றிருக்கிறது.

ஒருபக்கம் தேமுதிக, டிடிவி தினகரனின் அமுமுக ஆகிய கட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுவரும் முயற்சியில் பாஜக இறங்கியது. பாஜக தேர்தல் வியூக வகுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்து டிடிவி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இணைவதாக டிடிவி தினகரன் அறிவித்து விட்டார். இன்னும் மீதமிருப்பது தேமுதிக மட்டுமே. ஒருபக்கம், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் அனைவரும் வருகிற 23ஆம் தேதி சென்னை மதுராந்தகத்தில் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை ண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் பாஜகவின் முயற்சியில் மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வந்திருக்கிறார். இதையடுத்து எடுத்து எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் அவசரமாக ஆலோசனை நடத்தினார்.