தொடர்புடைய செய்திகள்
- திருச்சியில் விஜய்!.. QR கோட் கட்டாயம்!.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!..
- நாளை திருச்சியில் முதல்வர்!.. என்னப் பேசப்போகிறார் விஜய்?..
- போலீஸை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்!.. என்னா மனுஷன்!..
- கமிஷன், கட்டிங் முறை ரத்து.. டாஸ்மாக் கொள்முதலில் 51 கோடி ரூபாய் மீச்சம்.. இதுதாண்டா மாற்றம்...!
- ஒரே காரில் விஜயுடன் அஜித்துக்கு ஆறுதல் சொல்லப்போன திரிஷா!..
நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றபோதே கருப்பு கோட், கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். அதன்பின் தினமும் தலைமை செயலகம் வந்தபோதும், டெல்லிக்கு பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோதும் விஜய் அந்த உடையில்தான் சென்றார். தற்போது அதுவே முதல்வர் விஜயின் சீருடையாக மாறிவிட்டது.
இந்நிலையில்தான், தனக்கு வாக்களித்த திருச்சி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக இன்று முதல்வர் விஜய் திருச்சி சென்றார். ஜோசப் கல்லூரியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் விஜய் உரையாற்றினார். அப்போது கோட் சூட் அணிவது பற்றியும் விஜய் விளக்கம் கொடுத்தார்.
நாம கோட் சூட் போடுறது பத்தியெல்லாம் பேசுறாங்க.. ஏன்? நாம கோட் சூட் போடக்கூடாதா?.. அதிகாரம் செலுத்துபவர்கள் மட்டும்தான் கோட் சூட் போட வேண்டுமா?.. நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் கோட் சூட் போடுகிறேன். கலர் கலராக ஒன்றும் போடவில்லையே!. அதில் உள்ள கருப்பு யாரென்று உங்களுக்கே தெரியும் என்று பேசினார்.
மேலும், நான் முதலமைச்சர் அல்ல.. முதல் சேவகன் மட்டுமே. தவெக ஆட்சிக்கு வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும், மக்களுக்கும் இடையே இருப்பது பூர்வ ஜென்ம பந்தம். அந்த உறவை சூழ்ச்சி செய்து கெடுக்க முடியாது. தவெக ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு என்னவெல்லாம் பண்ணீங்க.. அது ரொம்ப பழைய டெக்னிக். அத வச்சிலாம் மக்களையும் நம்மையும் பிரிக்க முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியா செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பாருங்க என பேசினார்.
