1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay says about tnpsc exam canclled

திமுக அரசால் ஒரு டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை : விஜய்

vijay
திமுக அரசால் ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். 
 
அவர் மேலும் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்துவிட்டு உடனே ரத்து செய்துவிட்டார்கள். இது உலகத்துக்கே தெரியும். தேர்வை ரத்து செய்துவிட்டு தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இரவு - பகலாக படித்து கஷ்டப்பட்டு எப்படியாவது அந்த வேலை நமக்கு கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்த நமது தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அதை யாராவது யோசித்துப் பார்த்தீர்களா? 
ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. இதில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள், அனைவரும் தைரியமாக இருங்கள் என்று கூறுங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்முடைய ஆட்சி. அதனால் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம். 
 
இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு வெளிப்படையாக ஒரு தீர்வை காணுவோம்.நான் விக்ரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒன்று சொன்னேன். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. அந்த அரசியல் வெடிகுண்டு இப்போது அனைத்து கூட்டணியிலும் வெடித்துக்கொண்டு இருக்கிறது. தாறுமாறாக வெடித்துக்கொண்டிருக்கிறது, மு.க. ஸ்டாலின் பதறுகிறார், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்துவராது என்று கூறுகிறார். 
 
அவர்களை பொருத்தவரைக்கும் ஜெயிப்பதற்கு மட்டும்தான் கூட்டணி. மற்ற அனைத்துக்கும் அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக, ஆனால் வரும் செல்வத்தை எல்லாம் பார்ப்போம் தனியாக என்று இருக்கிறார்கள். அதுதான் சீக்ரெட். புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நம்முடன் நம் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.5,000 மட்டுமல்ல, ரூ.50,000 கொடுத்தாலும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடைவது உறுதி: டிடிவி தினகரன்