கரூரை அடுத்த சேலம்!.. விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர்!...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று தவெக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் அனுமதி கேட்டபோது போலீசார் 40-க்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளை விதித்தார்கள். குறிப்பாக 5 ஆயிரம் பேருக்கு மேல் இதில் கலந்து கொள்ள கூடாது.. எல்லோருக்கும் நுழைவு சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை கூறியிருந்தது.
இந்த கூட்டம் இன்று 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால் விஜய் பேசி முடித்த போதே சுமார் மத்யம் ஒரு மணி அளவில் இந்த கூட்டம் முடிந்து விட்டது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை
கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ்(37) என்கிற நபர் மூன்று மணி நேரமாக வெயிலில் நின்று கொண்டு வந்ததால் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்திருக்கிறார்..
அவர் மயக்கம் அடைந்தவுடன் அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்த விழுந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.. ஏற்கனவே விஜய் கரூருக்கு சென்றபோது 41 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தவெக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..