விஜய் கூட்டத்தில் இறந்தவர் அனுமதி இல்லாமல் வந்தவரா?... உண்மை என்ன?..
தவெக தலைவர் விஜய் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதிலிருந்து மீளவே விஜய்க்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில்தான், சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..
விஜய் இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்று சேலத்தில் வெயில் கொஞ்சம் அதிகாகவே இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுதான் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
வட மாநிலத்தை சேர்ந்தவரான இவர் இவரின் பெயர் சுராஜ். இவரின் வயது 37. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சேலத்தில் தங்கி வெள்ளி செய்யும் வேலை செய்து வந்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டிருந்ததால் அவர் மயக்கம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மறுத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஒருபக்கம், அவர் முறையாக பாஸ் வாங்கி செல்லவில்லை எனவும், 5000 பேருக்கு மட்டுமே அனுமதி.. அதுவும் நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்த நிலையில் இவர் எப்படி உள்ளே வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அவர் முறையாக பாஸ் வாங்கி நண்பர்களுடன் சென்றது தெரியவந்திருக்கிறது. உச்சவெயில் காரணமாக Heat Stroke ஏற்பட்டே அவர் மரணமடைந்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.