திங்கள், 30 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2026 (09:06 IST)

திமுக Vs தவெக!.. நான் யாருன்னு கோட்டையிலேயே காட்டுறேன்!.. சென்னையில் போட்டியிடும் தவெக முக்கிய நிர்வாகிகள்!...

vijay
தவெக பொதுக்கூட்டங்களில் பேசும் விஜய் இந்தமுறை திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என பலமுறை கூறினார் அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தாகக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்கிற இமேஜை உருவாக்க விஜய் முயற்சி செய்தார். ஆனால் திமுகவோ அதை கண்டு கொள்ளவில்லை.

தவெக இந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில்தான் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே நான் யார் என்று காட்டுகிறேன் என்பது போல தவெகவின் முக்கிய நிர்வாகிகள் எல்லோருமே சென்னையிலேயே போட்டியிட வைத்திருக்கிறார் விஜய்.

விஜய் -  பெரம்பூர்

ஆதவ் அர்ஜுனா - வில்லிவாக்கம்

ஜே.சி.டி பிரபாகர் - ஆயிரம் விளக்கு

புஸ்ஸி ஆனந்த் - தி. நகர்

ராஜ்மோகன் - எழும்பூர்

சபரிநாதன்  - விருகம்பாக்கம்

கிறிஸ்டி பிரித்திவி - வேளச்சேரி

மரிய வில்சன்  - ஆர்.கே.நகர்

வி.எஸ்.பாபு  - கொளத்தூர்

டி.செல்வம்  - சேப்பாக்கம்

சினோரா அசோக் - துறைமுகம்

வெங்கட்ராமன் - மயிலாப்பூர்

ராம்குமார் - அண்ணாநகர்

ஈ.சி.ஆர் சரவணன் - சோழிங்கநல்லூர்

கோகுல் - ராயபுரம்

பல்லவி - திருவிக நகர் (தனி)

அதாவது தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சென்னையில் போட்டியிட வைத்து சென்னையிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விஜய் முயல்கிறார்.. அவரின் எண்ணம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..