விஜயின் எஸ்கேப் ரகசியம் என்ன!.. நடிகை வினோதினி கோபம்!..
நடிகர் விஜய் அதிகம் பேசாதவர்.. இப்போது அரசியலுக்கு வந்து விட்டதால் பேச வேண்டிய நிலை.. எனவே அரசியல் பொதுக்கூட்டங்களில் மட்டும் ஆவேசமாக பேசி வருகிறார்.. அந்த இடத்தை தவிர வேறு எங்கேயும் விஜய் பேசமாட்டார். வேறு எங்கும் விஜயை பார்க்க முடியாது. யாரிடமும் எதுவும் பேச மாட்டார். விஜய் போன்ற அரசியல்வாதியை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை. ஏனெனில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்.. பேட்டி கொடுக்க மாட்டார்.. நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர்.. பனையூரிலிருந்து கிளம்பினால் பொதுக்கூட்டம்.. அதன்பின் வீடு. வேறு எங்கயும் விஜயை பார்க்க முடியாது..
இந்நிலையில், நடிகை வினோதினி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தை திருமாவளவன் என தமிழக அரசியல்வாதிகள் எல்லோருமே எல்லா இடங்களுக்கும் போகிறார்கள்.. அவர்களை செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்.. அவர்களும் பதில் சொல்கிறார்கள்..
ஆனால், விஜயை மட்டும் எங்கேயும் பார்க்க முடியவில்லை.. செய்தியாளர்களால் அவரை பிடிக்க முடியவில்லை.. அவர் அப்படி என்னதான் செய்கிறார் என்பது தெரியவில்லை.. இதற்காக ஒரு பெரிய டீமே விஜய்க்காக வேலை செய்கிறது.. இது ஆச்சரியமாக இருக்கிறது.. நான் ஊடகங்களிடம் கேட்கிறேன்.. எங்கெங்கயோ ஓடிப்போய் செய்திகளை சேகரிக்கிறீர்கள்.. அரசியல் தலைவர்களை விடாமல் கேள்வி கேட்கிறீர்கள்.. ஆனால் உங்களால் விஜய் மட்டும் பிடிக்க முடியவில்லையா?.. என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்..
அதேபோல் விஜய் போலவே இன்னொருவர் இருக்கிறார்.. கடந்த 11 வருடமாக அவர் எல்லா இடங்களுக்கும் போகிறார்.. ஆனால் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ன பிரதமர் மோடியை மறைமுகமாக அட்டாக் செய்தார் வினோதினி..