1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 25 மார்ச் 2026 (13:55 IST)

பாஜக வைத்த செக்!.. தேர்தல் செலவுக்கு பணமில்லை!.. அப்செட்டில் விஜய்!..

vijay
ஒரு அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திப்பது என சுலபமான காரியம் இல்லை. கட்சி நடத்த தொழிலதிபர்கள் நிதி கொடுக்கவேண்டும். மக்கள் ஆதரவு வேண்டும்.. தேர்தல் போட்டியிட பணம் வேண்டும் .தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செலவு செய்யாமல் வெற்றிபெற முடியாது. நான் நேர்மையானவன் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என்று சொன்னால் இங்கே மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.

மக்களை அப்படி அரசியல்வாதிகள் பழக்கி வைத்துவிட்டார்கள். இந்நிலையில்தான், தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுத்து வருகிறார். அவரின் தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடவிருக்கிறது. அதேநேரம் தேர்தலுக்கு பணம் இல்லாமல் தவெக நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது..

தற்போது வரை அந்த கட்சிக்கு பெரும்பாலான நிதியை ஆதவ் அர்ஜுனாதான் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. கரூர் சம்பவத்தில் பலியான 40 குடும்பத்தினருக்கு 20 லட்சம் வீதம் 8 கோடி கொடுத்ததும் அவர்தான் என்கிறார்கள். தற்போது ஆதவ் அர்ஜுஅனவின் மாமனார் லாட்டரி மார்ட்டினை அழைத்து பாஜக நெருக்கடி கொடுக்க அவர் கதவை சாத்தி விட்டாராம்.

vijay

ஒருபக்கம் ஹைதராபாத் சென்று சிலரை ஆதவ் அர்ஜுனா சந்தித்து  பேசியதாகவும் ஆனால் அங்கும் ஒன்றும் நடக்கவில்லை என தெரிகிறது. சமீபத்தில், அட்லியின் குடும்ப விழாவுக்காக விஜய் மும்பை சென்றபோது அவர் அங்கே ஒரு தொழிலதிபரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் நிதியுதவி கேட்டதாகவும் தெரிகிறது. ஆனால் டெல்லியில் அழுத்தத்தால் அந்த தொழிலதிபரும் பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் விஜய் என்கிறார்கள்.

அதோடு ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிடமிருந்து வருவதாக சொல்லப்பட்ட உதவியும் தடைபட்டு விட்டதாம். எனவே தவெக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சமாளித்து தனித்து போட்டியிட்டு தொகுதி மக்களுக்கு செலவு செய்து தவெக எப்படி தேர்தலை சந்திக்கும் என்பது தெரியவில்லை.