வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2026 (10:47 IST)

தூக்கத்திலிருந்து எழுந்து வாங்க முதல்வரே!.. நாங்கேரி சம்பவத்தில் பொங்கிய விஜய்!...

vijay stalin
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று இரவு டீக்கடையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் தாக்குதல் நடத்தினார்கள்.. அதில் சிதறி ஓடிய இரண்டு பேரை அந்த கும்பல் வெட்டிக் கொன்றது.. 5 பேர் வெட்டுக்காயம் அடைந்தனர்.. காயம் அடைந்தவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..

இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?

இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?..

போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?.. பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?..

மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி’ என அந்த அறிக்கையில் பதிவிட்டிருக்கிறார்.