1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay created new advocate team for tvk

கோர்ட்டு.. கேஸு!.. புது டீமை களமிறக்கிய தவெக தலைவர் விஜய்!...

vijay
ஒரு அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரணமில்லை.. அதுவும் 50 வருடங்களாக தமிழகத்தை ஆண்டு வரு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஒருபக்கம் மத்தியில் கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதும் சுலபமில்லை.

ஆனால் இது எல்லாவற்றையும் செய்ய தொடங்கியிருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்.. முன்பு திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் இப்போது அதிமுக, பாஜகவையும் பற்றியும் பேச துவங்கியிருக்கிறார்.. சமீபத்தில் அதிமுக ஊழல் அடிமை கட்சி என விமர்சித்தார்.. இதையடுத்து அதிமுகவும், பாஜகவும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..

இந்நிலையில். தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் 34 பேர் அடங்கிய தேர்தல் பிரச்சார மாநில சட்ட பாதுகாப்பு குழு குழுவை விஜய் உருவாக்கியிருக்கிறார்.. மாநில அளவில் பல வழக்கறிஞர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.. பிரச்சாரத்திற்கு அனுமதி கோருவது, சட்ட சிக்கல், சட்டரீதியான பாதுகாப்பு உள்ளிட்ட வேலைகளில் இந்த அணி கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது.

ஒருபக்கம், ரோட் ஷோ மற்றும் பொதுக் கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸுக்காக காத்திருக்கும் திமுக, தவெக, பாமக!.. நடப்பது என்ன?....