1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 31 ஜனவரி 2026 (13:27 IST)

காங்கிரஸுக்காக காத்திருக்கும் திமுக, தவெக, பாமக!.. நடப்பது என்ன?....

congress
தமிழகத்தில் 1952ம் வருடம் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது.. அப்போது முதல் மூன்று சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது.. ஆனால் அண்ணா துவங்கிய திமுக காங்கிரஸை தோற்கடித்துவிட்டு 1967ல் ஆட்சிக்கு வந்தது.. அதன்பின் இப்போது வரை காங்கிரஸால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை. எனவே திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட்டு வருகிறது.. குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே திமுகவின் முதுகில் சவாரி செய்துதான் காங்கிரஸ் தமிழகத்தில் பயணித்து வருகிறது..

தமிழகத்தில் காங்கிரஸுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை.. காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் கூட அந்த கட்சி திமுக கூட்டணி இருப்பதால்தான் விழுகிறது.. அப்படி இருக்கும் நிலையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் பேச துவங்கியிருக்கிறது.. ஆனால் அப்படி கொடுக்க திமுகவுக்கு விருப்பமில்லை..

இந்நிலையில்தான் கனிமொழி எம்பி சமீபத்தில் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பற்றியெல்லாம் பேசினார். அப்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை விட்டுவிடுங்கள்.. அது சாத்தியம் இல்லை தமிழகத்தில் அப்படி யாரும் கொடுத்ததில்லை’ என கனிமொழி சொன்னதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியானது..
congress

ஒருபக்கம் நாம் சொல்வதை காங்கிரஸ் கேட்கவில்லை என்றால் காங்கிரஸை கூட்டணியில் இருந்து அனுப்பி விடுவோம் என திமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதற்கு பதிலாக தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமகவை கூட்டணியில் கொண்டு வரும் முயற்சிகளும் நடப்பதாக தெரிகிறது.. ஆனால் பாமக உள்ளே வந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என விடுதலை சிறுத்தை திருமாவளவன் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. இதை திமுக தலைமை எப்படி சமாளிக்கும் என தெரியவில்லை.

ஆனாலும் காங்கிரஸ் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டவுடன் உங்களிடம் பேசுகிறோம் என ராமதாஸிடம் திமுக தரப்பு சொல்லி இருக்கிறார்களாம். ஒருபக்கம் காங்கிரஸ் கேட்பதை கண்டிப்பாக திமுக கொடுக்காது.. எனவே அவர்கள் நம் பக்கம் வருவார்கள் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நம்பி காத்திருக்கிறார்.

ஒரு தேசிய கட்சி நம்முடைய கூட்டணியில் இருந்தால் கட்சியின் இமேஜ் உயரும் என விஜய் நினைப்பதாக தெரிகிறது..எனவே காங்கிரஸ் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, தவெக போன்ற எல்லா கட்சிகளுமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.